ஜூன் 08, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் நவீன். இவர் லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரின் நண்பர் மாரி. இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். நண்பர்களான இருவரும் அவ்வப்போது செலவுக்காக வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மோகனூர் சாலையில் வழிபறிக்காக காத்திருந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது. அச்சமயம் மாரி தனக்கு வலிப்பு வந்ததுபோல நடித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இருசக்கர வாகன ஓட்டி, மாரியை காப்பாற்ற முயற்சித்துள்ளார். Narendra Modi Meets President Droupadi Murmu: குடியரசு தலைவியை நேரில் சந்தித்த மோடி.. எம்பிக்கள் பட்டியல் ஒப்படைப்பு..!
வழிப்பறி முடிந்ததும் மரணம்: இதனை தனக்கு சாதகமாக்கிய இருவர் கும்பல், வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னார் என்பவரை மிரட்டி செல்போன், ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். பின் சிறிது தூரத்தில் இருவரும் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் மாரி மற்றும் நவீன் ஆகியோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பணம் மற்றும் செல்போனை இழந்த பொன்னார், அதே வழியில் தொடர்ந்து பயணித்தபோது இவர்கள் விபத்திற்குள்ளானது தெரியவந்தது. அங்கு விசாரணைக்காக இருந்த காவல்துறையினரிடம் இருவரின் செயல் குறித்தும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.