ஜனவரி 02, ஆவுடையார்கோவில் (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், டி. களபம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால், ஆண்டிகூடம்பட்டி கிராமத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில், தற்போது மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். அரையாண்டு விடுமுறையை நிறைவு செய்த மாணாக்கர்கள், இன்று பள்ளிக்கு வழக்கம்போல வருகை தந்திருந்தனர். Chennai HC: அண்ணா பல்கலை., விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.!
நல்வாய்ப்பாக காயம் / உயிரிழப்பு இல்லை:
சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பள்ளியில் இருந்த நிலையில், சமையலர், சமையல் கூடத்தில் சமைக்கும் பணிகளை மேற்கொண்டு இருந்தார். அச்சமயம் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. வாயுக்கசிவு காரணமாக, மதிய உணவு சமைக்கும்போது சிலிண்டர் வெடித்தது உறுதியானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், கட்டிடத்தின் தன்மையை சோதனை செய்தனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சமைக்கும் பணியில் ஈடுபட்டபோது சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது: