Girl Sad (Photo Credit: Pixabay)

ஜனவரி 13, சேலம் டவுன் (Salem): சேலம் மாவட்டத்தில் வசித்து வந்த இளம்பெண், அவரின் தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றி இயற்கை எய்தியதால், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்த தேவராஜனை சந்தித்து பேசி இருக்கிறார். Mahindra Electric Origin SUVs: உலகத்தரத்தில் தயாராகி, சாலைகளில் களமிறங்கும் மகேந்திரா எலக்ட்ரிக் கார்; கொடியசைத்து தொடக்கி வைத்த தமிழ்நாடு முதல்வர்.! 

காவல் நிலையத்தில் புகார்:

அப்போது, பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டவர், பெண்ணுக்கு தொடர்புகொண்டு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். மேலும், தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, தனது செல்போனில் பேசியதை பதிவு செய்து, ஆதாரத்துடன் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கண்காணிப்பாளர் கைது:

புகாரை ஏற்ற காவல்துறையினர், தேவராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் தேவராஜனை நேற்று கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.