Salem Money Laundering Scam Accuses Arrested on 24 Jan 2025 (Photo Credit: SanghiPrince X)

ஜனவரி 24, அம்மாபேட்டை (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில், ஆத்தூர் பிரதான சாலையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில், விஜயா பானு என்ற அன்பர், "புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை" பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த அலுவலகத்தில் பணம் செலுத்தும் மக்களுக்கு ரூ.1 இலட்சத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி வலைவிரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 இலட்சம் செலுத்திய பின்னர், மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கி, அசல் தொகையை 7 மாதத்தில் பணத்தை திருவதாகவும் கூறி இருக்கிறார். குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் தொகை செலுத்தினாலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஊழியர்களை நியமித்து மோசடி:

இதனால் சேலம், அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சென்ற ஏராளமானோர் பணம் செலுத்த, தனிநபரிடம் இருந்து ரூ.10 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை டெபாசிட் செய்துள்ளனர். இதனால் மொத்தமாக ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை வருமானம் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பணத்துக்கு ரசீது கொடுக்காமல் டோக்கன் மட்டும் வலனாகி இருக்கின்றனர். மேலும், வரவு-செலவுகளை கவனிக்க 50 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். Online Rummy Suicide: ரூ.17 இலட்சம் இழப்பு.. நாகர்கோவில் தீயணைப்பு படை வீரர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை.! 

காவல் துறையினர் மீது தாக்குதல்:

இந்த விஷயம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, நேற்று டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள், மண்டபத்திற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் சாதாரண சீருடையில் சென்றதால், அலுவலக ஊழியர்கள் மற்றும் மக்கள் காவலர்களை தாக்கி இருக்கின்றனர். தகவல் அறிந்து கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் என 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், சோதனையில் ரூ.2 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

12 பேர் கைது., எஞ்சியோருக்கு வலை:

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விஜயா பானு கட்சி ஒன்றில் நிர்வாகியாக இருந்து, உள்ளாட்சி தேர்தலில் களம்கண்டு தோல்வி அடைந்த நபர் எனவும் கூறப்படுகிறது. விஜயா பானு, ஜெயப்பிரதா என 8 பெண்கள், 4 ஆண்கள் என 12 பேரை கைது செய்துள்ள அதிகாரிகள், வழக்கில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர். இவர்களுடன் கிருத்துவ மதபோதகர் ஒருவரும் கைதாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.