ஜனவரி 24, ரெட்டியார்பட்டி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி (வயது 29). இவர் நாகர்கோவில் தீயணைப்புத்துறையில் வேலை பார்க்கிறார். கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரி. தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. Senthil Balaji: மாதம் ஒருமுறை மின்கட்டணம் - மகிழ்ச்சி செய்தியை கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி.!
காவல்துறையினர் விசாரணை:
இந்நிலையில், திருப்பதி சாரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள இரயில் தண்டவாளத்தில், கருப்பசாமி இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை முன்னெடுத்தனர்.
பணத்தை இழந்ததால் சோகம்:
விசாரணையில், கடன் தொல்லை காரணமாக கருப்பசாமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து இறுதியில் விபரீதத்தை தேடிக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. ரூ.17 இலட்சம் பணத்தை இழந்தவர், கஷ்டப்பட்டு சம்பாத்தியம் செய்த பணத்தை இழந்த விரக்தியில் முடிவை தேடிக்கொண்டது தெரியவந்தது. கடந்த 14 மாதங்களில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தற்கொலை எண்ணிக்கை மட்டும் 18 ஆகும். 2025ம் ஆண்டுக்கான ஆன்லைன் ரம்மி தற்கொலை விஷயத்தில், தீயணைப்பு படை வீரர் முதல் பலி ஆவார்.