
ஜூலை 01, திருப்புவனம் (Sivaganga News): சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித் குமார் (வயது 27). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் காரை சாலையோரம் நிறுத்திய விவகாரத்தில் காரில் இருந்த நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் மானாமதுரை எஸ்.பி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
நகை திருடியதாக இளைஞர் மீது சந்தேகம் :
விசாரணையில், இளைஞர் அஜித்குமார் நகை திருடியதாக சந்தேகிக்கப்பட்டு அவரை இரண்டு நாட்கள் கடுமையாக அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். முடிவில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்த (Sivaganga Lockup Death) நிலையில், அவரது மரணம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜித் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்ட ஐந்து காவலர்களும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சூடான குழம்பில் விழுந்து 18 மாத குழந்தை துள்ளத்துடிக்க பலி.. அடுத்தடுத்து 2 குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்.!
இளைஞரின் மர்ம மரணம் :
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் வழக்கை சமரசமாக முடிக்க வேண்டி அரசியல் கட்சி பிரபலம் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வழக்கை சிபிசிஐடி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் சரமாரி கேள்வி :
அப்போது விசாரணை செய்த நீதிபதிகள், "நேரடியாக திருட்டு வழக்கு விஷயத்தில் தனிப்படை காவல்துறையினர் களமிறங்கியது ஏன்?, உரிய முறையில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா?, ஆயுதமில்லாத நபரை எதற்காக இவ்வளவு கடுமையாக தாக்க வேண்டும்?, அவர் என்ன தீவிரவாதியா?, யாரை மறைக்க அரசு முற்பட்டு வருகிறது?, இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிப்பட வேண்டும். உயர் அதிகாரிகளை காப்பாற்ற நினைத்து காவலர்கள் இவ்வாறு செயல்படுவது எப்படிப்பட்டது? என அரசுக்கு எதிராக தங்களது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்திருந்தனர்.
இளைஞரை தாக்கிய போலீசார் (Sivagangai Custody Death):
இதனிடையே இளைஞர் அஜித்குமாரின் (Ajith Kumar Attacked By Police) மீது காவலர்கள் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளில் பிரம்பு கொண்டு இளைஞர் அஜித்குமார் தாக்கப்படுகிறார். இந்த விடியோவை இணையத்தில் பகிரும் நெட்டிசன்கள் #JusticeForAjithkumar என பதிவிட்டு நியாயம் கேட்டு வருகின்றனர்.
இளைஞர் மீது காவலர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ (Police Attack Video) :
சிவகங்கை இளைஞர் அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது#JusticeForAjithkumar pic.twitter.com/Bu90rkjXSk
— S.R.P.THIRU MOORTHI - #SayYesToWomenSafety &AIADMK (@ThimilThiru) July 1, 2025