
ஜூலை 01, உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் துத்தி பகுதியில் வசித்து வரும் தம்பதி பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளனர். தம்பதிக்கு 2 மகள்கள் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பருப்பு சமைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை அதில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோரை வெகுவாக பாதித்த நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் மற்றொரு குழந்தையும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 42 பேர் பரிதாப பலி.!
கொதிக்கும் பானையில் தவறிவிழுந்து துடித்த குழந்தை :
சம்பவத்தன்று விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தை அடுத்த அறைக்கு சென்றபோது பானிபூரிக்காக தயார் செய்திருந்த பட்டாணி பானையில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தீக்காயங்களுடன் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தபோது அங்கு சிறுமியின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் மரணம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டதால் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.