மார்ச் 31, கடையநல்லூர் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், இந்திரா நகரில் வசித்து வருபவர் குட்டையன். இவரின் மகன் மாரியப்பன். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து, சிறிய அளவிலான கொட்டகையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு: இவரது வீட்டில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் தினமும் தங்கையின் கணவர் வீட்டிற்கு சென்று தண்ணீர் பிடிப்பது வாடிக்கை ஆகும். ஆனால், இவர்களின் வீட்டருகே இருக்கும் பண்டாரம் என்பவரின் மகன் லட்சுமணன் (வயது 60), தனது அண்ணன் ராஜு வீட்டில் நீ எப்படி தண்ணீர் (Kadayanallur Man Killed for Water Dispute) பிடிப்பாய்? என தகராறு செய்துள்ளார்.
சரமாரியாக தாக்குதல்: மாரியப்பனோ தங்கையின் கணவர் வீட்டில் பிடிக்கிறேன் என பேச, வாக்குவாதம் முற்றி செருப்பு தைக்கும் தொழிலாளியான லட்சுமணன், தான் வேலைக்கு பயன்படுத்தும் கத்தியை கொண்டு மாரியப்பன் மீது சரமாரி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் உறவினர்களால் மீட்கப்பட்ட மாரியப்பன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். College Student Drowned And Died: அணையை சுற்றி பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் – கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி..!
பரிதாபமாக உயிரிழப்பு: அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்துவிடவே, தகவல் அறிந்த கடையநல்லூர் காவல் துறையினர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி சம்பவம் தெரியவரவே, அதிகாரிகள் தலைமறைவான லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பலியான மாரியப்பனுக்கு பேச்சியம்மாள் (35) என்ற மனைவியும், முத்துராஜ் (13), போதிராஜ் (2), போத்திமுத்து (1) என 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.