மார்ச் 30, கடத்தூர் (Dharmapuri News): தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கல்லூரியில் பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி இருக்கின்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். நாகராஜ் என்பவர் விடுதியின் காப்பாளராகவும், சமையலராக சிலம்பரசன் என்பவரும் மற்றும் விடுதி கண்காணிப்பாளராக தங்கவேல் ஆகியோரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

கல்லூரிக்கு நேற்றிலிருந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நிறைய மாணவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். இருபது மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பிரேம் குமார் (வயது 19) மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்துள்ளார். மேலும், பூபதி (வயது 17) முதலாம் ஆண்டு இயற்பியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் உணவு அருந்திவிட்டு, வாணியாறு அணையை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். Cylinder Burst Accident: சமையல் எரிவாயு வெடித்துச் சிதறல்; தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக பலி..! அதிகாலையில் நேர்ந்த சோகம்..!

அணையை சுற்றி பார்த்துகொண்டிருக்கும் போது, பிரேம்குமார் தந்து செல்போனில் புகைப்படம் எடுக்க சொல்லி பூபதியிடன் கூறியுள்ளார். பின்னர், அவர் அணையில் இறங்கும் போது, சேற்றில் சிக்கிக்கொண்டு (Stuck In Mud College Student Death) வெளியே வர போராடியுள்ளார். பூபதி அவரை காப்பாற்ற முயற்சித்த போதும், அவரினால் மீட்க முடியாத நிலையில் கத்தி சத்தமிட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சேர்ந்து மாணவர் பிரேம் குமாரின் உடலை சடலமாக மீட்டனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.