Anbumani & Ramadoss PMK (Photo Credit: Facebook)

ஜூன் 12, நீலாங்கரை (Chennai News Today): பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து (Anbumani Vs Ramadoss) மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் மற்றும் பதவி நீக்கம் என பந்தாடப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே இணக்கமான சூழல் உருவாக பேச்சு வார்த்தைகளும் நடைபெற்ற வருகின்றன. ஒவ்வொரு நாளும் ராமதாஸ் தரப்பில் மாவட்ட செயலாளர்கள் உட்பட பல கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி:

பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தனக்கே உரிய அதிகாரம் உள்ளது, நானே கட்சியின் தலைவர் என்ற விஷயத்தில் அன்புமணியும் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது மகளுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஈடுபட்டு வந்திருந்தார். ஆனால் எந்த விதமான முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. பாமகவில் தன்னை மிகப் பெரிய ஆளுமை தலைவராக நிலை நிறுத்திக் கொண்ட அன்புமணி பக்கம் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர். Tiruvallur News: கஞ்சா குடிக்கிகளை தட்டி கேட்ட காங்.பிரமுகர் கல்லால் அடித்து கொலை.. தமிழகத்தில் பயங்கரம்.! 

பாமக உட்கட்சி பிரச்சனை (PMK Clash):

ராமதாஸ் பக்கம் ஒரு சில கட்சி நிர்வாகிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடக்கத்தில் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்த திலகபாமா பதவி நீக்கம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் எனது அதிகாரம் இல்லாமல், கையெழுத்து இல்லாமல் எதுவும் செல்லாது என திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அறிவிப்பு வெளியிட்டார்.

பாலு நீக்கம் அன்புமணி Vs ராமதாஸ் :

நேற்று (ஜூன் 11) வழக்கறிஞர் பாலுவை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த விஷயத்துக்கு அன்புமணியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாலு தனது பொறுப்பில் அப்படியே தொடர்வார் என்று பதிலடி தரப்பட்டது. இந்நிலையில், சென்னை பனையூரில் கட்சியினர் இடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பொறுப்பில் கோபு என்பவர் நியமனம் செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அன்புமணி அதிரடி பேச்சு :

இதுதொடர்பாக அவர் பேசுகையில், "பல ஆண்டுகளாக பாமக பொறுப்பில் இருந்த வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. சமூக நீதி வழக்கறிஞராக கோபு தேர்வு செய்யப்பட்டது துரதிஷ்டவசமானது. அவர் வழக்கறிஞர் தொழிலுக்கு தகுதி இல்லாதவர். எத்தனையோ காலங்களில் பாலு கட்சிக்காகவும், நமக்காகவும் உழைப்புகளை வெளிப்படுத்தி இருக்கிறார். தகுதி இல்லாத மனிதரான கோபுவை வழக்கறிஞர் பேரவைக்கு தலைவராக நியமனம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. பாலு அவரது பொறுப்பில் அப்படியே தொடருவார். கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். ராமதாஸ் சொல்லிக் கொடுத்த வழியில் நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம்" என பேசினார்.