நவம்பர் 07, களக்காடு (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, ஆற்றங்கரை தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 39). இவர் பாத்திர வியாபாரி ஆவார். இவரின் மகள் முத்துலட்சுமி (வயது 18), களக்காட்டில் செயல்பட்டு வரும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
விடுதி செலவு:
கடந்த ஓராண்டாக திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மைய விடுதியில் தங்கியிருந்தவாறு, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். விடுதிக்கு அதிகம் செலவாகிறதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மணிகண்டன் மகளிடம் வீட்டில் இருந்து பயிற்சிக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். Spa Salon: ஸ்பா, சலூன் வைத்து வருமானங்களை குவிக்க ஆசையா? இலவச பியூட்டிஷியன் பயிற்சி.. விபரம் இதோ.!
காலதாமதத்தால் மாணவி கோரிக்கை:
தந்தையின் அறிவுரைப்படி வீட்டிலிருந்து தினமும் அதிகாலை எழுந்து முத்துலெட்சுமிக்கு பயிற்சிக்கு சென்று வந்த நிலையில், காலதாமதம் காரணமாக தான் விடுதியில் தங்கி இருந்து படிப்பதாக முத்துலட்சுமி தந்தையிடம் கூறியுள்ளார். இந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை:
இதனால் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி, யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி இருக்கிறார்.
காவல்துறையினர் விசாரணை:
சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முத்துலட்சுமியின் உடலை மீட்ட குடும்பத்தினர், நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்சென்ற நிலையில், மருத்துவரால் ஏற்கனவே அவர் இழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக களக்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.