செப்டம்பர் 18, கூத்தாநல்லூர் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், புள்ளமங்கலம் கிராமத்தில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று காலை மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், கட்டுமான தொழிலாளர்களும் வேலைகளை செய்து வருகின்றனர். இதனிடையே, இன்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அச்சமயம் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு டிராக்டரும் வந்த நிலையில், ஆசிரியர் சிவா சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி இருக்கிறார். இதில் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த டிராக்டர் ஓட்டுநர் முருகன், கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் பணியாளர் சக்திவேல் ஆகியோர் சேர்ந்து ஆசிரியரை பயங்கர ஆயுதத்தால் தாக்கி இருக்கின்றனர். Udhayanidhi Stalin: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்?; உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்.. அமைதிகாக்கும் உதயநிதி.. பேட்டி.!
ஆசிரியர் மண்டை உடைப்பு:
இந்த சம்பவத்தில் ஆசிரியரின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு அமைதிப்படுத்தினார். மேலும், அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அவசர ஊர்தி குழுவினர் மற்றும் ஆசிரியர் சிவாவின் சகோதரரான ஆசிரியர் பாலா சகோதரரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் அடாவடி கும்பலிடம் தட்டிக்கேட்டபோது, அவரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியராக பணியாற்றி வரும் சிவா, தற்போது திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.