நவம்பர் 27, கோவில்பட்டி (Thoothukudi News): கார்த்திகை திருநாளானது நேற்று தமிழகத்தில் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள், மாலை அண்ணாமலையாரை ஜோதியாக தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 11 நாட்களுக்கு அண்ணாமலையார் திருவண்ணாமலையில் ஜோதியாக காட்சி தருகிறார். அதேபோல, தமிழகமெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் கார்த்திகை தீபத்திருநாளை நாளை முன்னிட்டு, பலரும் தங்களது வீடுகளில் மாலை 6 மணிக்கு மேல் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். Kartika Purnima: 5 ஆயிரம் மலர்களுடன் மணல் சிற்பம்; பூரி கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் அசத்தல்.!
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஏற்றப்பட்ட அகல் விளக்கில் இருந்த தீ பரவி, கார் மற்றும் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நடந்துள்ளது. அலட்சியமாக வாகனங்களுக்கு அருகே அகல் விளக்குகளை ஏற்றி வைத்தது தீ விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
#WATCH | Thoothukudi, Tamil Nadu: A car and a bike were destroyed after a fire spread from a lamp lit at the door of a house in Kovilpatti. (26.11) pic.twitter.com/1uyDfFmQzH
— ANI (@ANI) November 27, 2023