Tirunelveli Double Murder on 20 January 2025 (Photo Credit: @TheHindu X)

ஜனவரி 20, ஆரோக்கியநாதபுரம் (Tirunelveli News): திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 55). இவரின் மனைவி செல்வராணி (வயது 53). தம்பதிகளுக்கு 30 வயதுடைய ஜெனிபர் என்ற மகள் இருக்கிறார். இதே பகுதியில் வசித்து வந்தவர் மரியகுமார் (வயது 36). ஜெனிபர் - மரியகுமார் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

புதிய காதலருடன் சென்றார்?

இதனிடையே, மரியகுமார் - ஜெனிபர் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் ஜெனிபர் தனது தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக வடமாநிலத்தை சேர்ந்த நபருடன் காதல் வயப்பட்டு, அவருடன் ஜெனிபர் சென்றதாக கூறப்படுகிறது. Nagarcoil News: பரிகாரம் பலிக்காததால் ஆத்திரம்; ஜோதிடரை முகநூல் நண்பரை வைத்து தீர்த்துக்கட்டிய பெண்மணி.! 

கணவர் அதிர்ச்சி செயல்:

இந்த விஷயம் மரியகுமாருக்கு தெரியவரவே, அவர் சம்பவத்தன்று தனது மாமனார் பாஸ்கர், மாமியார் செல்வராணி வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அங்கு வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைத்தவர், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார்.

மாமனார் - மாமியார் மரணம்:

இந்த சம்பவத்தில் நிலைகுலைந்துபோன இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.