Breaking: திருவண்ணாமலையில் திடீர் மண்சரிவு; பூமிக்கடியில் புதைந்துபோன 3 வீடுகள்.! 7 பேரின் நிலை என்ன?
மழை காரணமாக மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில், 3 வீடுகளில் தங்கியிருந்தவர்கள் சிக்கிக்கொண்டதாக திருவண்ணாமலையில் இருந்து தகவல் கிடைத்துள்ளன.
டிசம்பர் 01, திருவண்ணாமலை (Tiruvannamalai News): வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தொடர் கனமழையை எதிர்கொண்டது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. School College Holiday: கனமழை, வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் விடுமுறை; முழு விபரம் இதோ.!
பாறை உருண்டு விழுந்தது:
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலையடிவார பகுதியில் வ.உ.சி நகர் இருக்கிறது. இந்த பகுதியில் தொடர் மழை காரணமாக 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளது. இந்த வீட்டில் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வசித்து வந்ததாக தெரியவருகிறது.
சிக்கிக்கொண்ட 7 பேர்:
இதனால் 7 பேர் அங்கு சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. பெரிய அளவிலான பாறை ஒன்று விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் அங்கு நடைபெறுகிறது. பாறை உருண்டு வீடு மீது விழுந்ததால், மீட்புப் பணிகள் தாமதம் அடைந்துள்ளது.
7 பேர் நிலைமை தெரியவில்லை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு:
#Watch | திருவண்ணாமலையில் வீடுகள் மீது சரிந்து விழுந்த பாறை.. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா..? -மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடுத்த தகவல்!#Tiruvannamalai | #FengalStorm pic.twitter.com/N7ILhfBpNC
— MOHAN K DMK NKL (@20101976M) December 1, 2024
(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 10:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

