பிப்ரவரி 07, நெல்லையப்பர் கோவில் (Tirunelveli News): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (MK Stalin Tirunelveli Visit), திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்தில் கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு இருந்தார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருந்தார். நேற்று இரவு, நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று இருந்தார். அங்கு திடீரென முதல்வர் வந்தது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அல்வா கடை குழுவினர் இடையே நலம் விசாரித்த முதல்வர், பொதுமக்களிடமும் பேசி அல்வாவை சாப்பிட்டு மகிழ்ந்தார். மேலும், எளிய மக்களுடன் எளியவனாக பழகுவது, தனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். Tiruppur Accident: 2 கல்லூரி மாணவர்களின் உயிருக்கு எமனான திருப்பூர் தனியார் பேருந்து.. ஓட்டுநர், நடத்துனர் கைது.!
இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டு மகிழ்ந்த முதல்வர்:
திருநெல்வேலி, கீழ ரத வீதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடைக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று, அல்வாவினை வாங்கி, கடை உரிமையாளரிடம் உரையாடினார். pic.twitter.com/Q4TzDIl4TU
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 6, 2025
நெல்லையில் முதல்வருக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு:
நெல்லை மாநகருக்கான திட்டங்களை வழங்கினேன்; மக்களின் அன்பைப் பெற்றுக் கொண்டேன்💗#ThirunelveliVisit pic.twitter.com/H6A40aC982
— M.K.Stalin (@mkstalin) February 6, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)