பிப்ரவரி 07, வேலூர் (Vellore News): ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradsh) மாநிலத்தில் வசித்து வரும் இளம்பெண், திருப்பூரில் (Tiruppur) செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது 4 மாத கர்ப்பிணியாக (Pregnant Girl) இருக்கும் நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளார். நேற்று கோயம்புத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை (Coimbatore To Tirupati Intersity Express Train) வழியே, திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில், பொதுப்பெட்டியில் (General Coach) ஏறி பயணம் செய்துள்ளார்.
பெண்ணை கீழே தள்ளிவிட்டனர்:
இரயில் வேலூர் (Vellore) மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் - கே.வி குப்பம் (Gudiyatham to KV Kuppam) இரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது, அப்போது, இளம்பெண் கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அங்கு போதையில் இருந்த இரண்டு நபர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துள்ளனர். இதனால் பெண் அலறிய நிலையில், அங்கிருந்த பயணிகள் பதறியபடி வந்துள்ளனர். இதனால் போதை நபர்கள் பெண்ணை ஓடும் இரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, வேறொரு பெட்டிக்கு சென்று நின்றுகொண்டனர். திருப்பூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.!
மருத்துவமனையில் அனுமதி:
தண்டவாளத்தில் படுகாயத்துடன் இருந்த இளம்பெண்ணை மீட்ட காவல்துறையினர், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைத்தனர். பெண்மணி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் வாக்குமூலத்தை பெற்று, அதன் பேரில் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.
ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதானவர்:
இதனிடையே, கே.வி குப்பம் பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் வசித்து வந்த ஹேமராஜ் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே இரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளியே இருக்கும் நிலையில், மீண்டும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கொலை செய்யவும் முயற்சித்து இருக்கிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3