
பிப்ரவரி 06, ஊத்துக்குளி (Tiruppur News): திருப்பூர் ஊத்துக்குளியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.
திருப்பூர் (Tiruppur Accident) மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி (Uthukuli), செங்கம்பள்ளி பகுதியில் இன்று தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி, தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த சக்தி டிரான்ஸ்போர்ட் தனியார் பேருந்து, செங்கம்பள்ளி பகுதியில் உள்ள பள்ளக்கவுண்டம்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கியது.
2 கல்லூரி மாணவர்கள் பலி:
அதிகளவு அளவு பயணிகளை ஏற்றிக்கொண்ட தனியார் பேருந்து, தனக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. அப்போது, அதிக பாரம் காரணமாக பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். Student Gang Raped by 3 Teachers: 13 வயது சிறுமியை சீரழித்த 3 ஆசிரியர்கள்; கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி.!
10 பேர் படுகாயம்:
இவர்களில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், ஒருசிலரின் கை-கால்கள் துண்டாகியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த உள்ளூர் பொதுமக்கள், காவல்துறையினர், மீட்பு படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியம், அதிவேகத்தால் சோகம்:
முதற்கட்ட விசாரணையில் பலியான கல்லூரி மாணவர்கள் ஈரோடு நந்தா கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் பெரியசாமி என்றும் களநிலவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இன்று காலை சுமார் 08:20 மணியளவில் விபத்து நடந்துள்ளது. தநா 34 டி 4050 (TN 34 T 4050) பதிவெண் கொண்ட சக்தி டிரான்ஸ்போர்ட் (Sakthi Transports) தனியார் பேருந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. ஓட்டுனரின் அதிவேகம், பேருந்தின் அதிக பாரம் போன்றவை விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.