Sivakasi Fire Accident (Photo Credit : @News18TamilNadu X)

ஜூலை 01, சிவகாசி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி சின்ன காமன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், திடீரென ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் பலரும் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தரங்க உறுப்பில் பழச்சாறு ஊற்றி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்.! 

துடிதுடித்து பலியான சோகம் :

இதனிடையே தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தீயை முதலில் அணைத்து, பின் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக இந்த விபத்தில் மீட்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆலையில் சிக்கி இருக்கும் பிறரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சிவகாசி வெடிவிபத்து தொடர்பான வீடியோ :

வீடியோ நன்றி : CNNnews18 X