Gold Silver Price (Photo Credit: Pixabay)

டிசம்பர் 05, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு உயர்ந்த விலை:

தங்கத்தின் விலை கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதையும் தாண்டி விற்பனையாகிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை (Gold Rate in Chennai):

இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு 7ஆயிரத்து 130 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 57ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் 7ஆயிரத்து 140 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.