Rain in Tamilnadu (Photo Credit: @THChennai X)

ஜூலை 17, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் தென்மேற்குப்பருவமழையானது (Southwest Monsoon) தீவிரமடைந்து இருக்கிறது. இதனால் பல மாநிங்களில் நல்ல மழை பெய்து வருகிறது, பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பின்படி, "தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. Worker Was Sentenced To Life Imprisonment: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

ஜூலை 20 & 21 தேதிகளில் தரைக்காற்று:

இதனால் மாநில அளவில் மழை தொடருகிறது. இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யும். நாளை கனமழையும், நாளை மறுநாள் மிககனமழையும் பெய்யும். ஜூன் 20 மற்றும் 21ம் தேதிகளில் ஒருசில இடங்களில் தமிழ்நாட்டில் பலத்த தரைக்காற்று வீசும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை:

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி , தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், அங்கு 4 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.