நவம்பர் 13, புதுடெல்லி (New Delhi): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்துள்ளது. இது வடதமிழ்நாடு கடலோர பகுதி, தெற்கு-ஆந்திரா அருகே வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Kotagiri Govt Hospital: திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்; அரசு மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை..!
மழை பெய்யும் நிலை மாறலாம்:
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. தலைநகர் சென்னையிலும் கனமழை பெய்தது. காற்றில் ஏற்பட்ட மாற்றம், வளிமண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வலுவிழப்பு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்ததால் மழை அளவு குறித்த விஷயங்கள் மாறுபாடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.