Kotagiri Govt Hospital Mobile Torch Treatment (Photo Credit: @mahajournalist X)

நவம்பர் 13, கோத்தகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி (Kotagiri), இடுகரை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 3 வயதுடைய மகள் இருக்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால், தம்பதியின் 3 வயது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர ஊர்தி உதவியுடன், சிறுமியை உடனடியாக கோத்தகிரி (Kotagiri Govt Hospital) அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். Breaking: கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பயங்கரம்; மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து.!

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை:

சிறுமி மருத்துவமனைக்கு வந்ததும் திடீரென காற்று மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவமனை சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு இருந்த ஜெனரேட்டரை இயக்க உறவினர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனிடையே, மேற்கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில், சிறுமி மின்சாரம் இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக வைரலாகி வருகிறது.

செல்போன் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த காணொளி: