
மார்ச் 19, சென்னை (Chennai News): சென்னையில் வளர்ப்பு நாய்களை (Pet Dog), பொது இடத்துக்கு அழைத்து வரும்போது, அவற்றுக்கு வாய்மூடியான முகக்கவசம் அணிவது கட்டாயம். சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், நாய்களை வெளியே அழைத்து வர வேண்டும். மேலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், மாநகராட்சியின் பதிவு உரிமமும் பெற்றிருக்க வேண்டும். Nellai News: ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட விவகாரம்; வெளியானது மரண வாக்குமூல வீடியோ.. பதறவைக்கும் தகவல்.!
வாய்க்கவசம்:
வளர்ப்பு நாய்கள், பொதுமக்களை கடித்தால், அதற்கு உரிமையாளர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பின்பற்றாமல், வளர்ப்பு நாய்களை கொண்டு வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும், நாய் வளர்ப்போர் அவற்றை பின்பற்றுவதில்லை.
அபராதம்:
இதனால், சாலையில் செல்வோரை சில நேரங்களில் வளர்ப்பு நாய்கள் கடித்து குதறி வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், வாய்க்கவசம் அணியாமல் சாலைக்கு அழைத்து வரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு, ரூ.1,000 அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.