Water Death (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 02, சேலம் (Salem News): கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உள்ளன. அதை அடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு நீர்வரத்து 1,52,903 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 1,53,091 கன அடியாக உயர்ந்தது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தோடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர்-இடைப்பாடி சாலை மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. Alien Temple In Salem: ஏலியனுக்கு கோவில் கட்டி அலப்பறை செய்யும் நபர்.. சேலத்தில் பரபரப்பு..!

இந்நிலையில் சேலம் மேட்டூர் காவிரி வெள்ளத்தை பார்க்க வந்த கவிதா, முகம் கழுவ கையில் தண்ணீரை எடுத்த போது ஆற்றில் விழுந்துள்ளார். தொடர்ந்து நீரில் அடித்து செல்லப்பட்டார். இத்தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரால், கவிதா சடலம் மீட்கப்பட்டது. சடலமானது ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள உயர் மின்சார கோபுரத்தின் அடிப்பகுதியில் சிக்கி இருந்தது. தொடர்ந்து அவரின் உடல் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.