Kuwait Fire Tragedy (Photo Credit: @IndianTechGuide X)

ஜூன் 13, குவைத் (World News): குவைத்தின் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்த 6 மாடி கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து (Kuwait Fire) ஏற்பட்டது. சுமார் 195 பேர் வசித்து வந்த நிலையில் 53 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் 40 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். அதில் 7 தமிழர்களும் அடங்குவர். பெரும்பாலானோர் அதான் மருத்துவமனையில் 21 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 11 பேர் அல் கபீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், இன்று காலை டெல்லியிலிருந்து குவைத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன், ஏஎன்ஐ_க்கு பேசிய அவர், "உயிரிழந்தவர்கள் பலரது உடல்கள் முழுவதும் கருகியுள்ளன. எனவே டிஎன்ஏ சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்ட உடன், உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார். Tenkasi Accident: தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி.. பிரேக் பிடிக்காததால் நடந்த சோகம்..!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கட்டிடத்தின் சமையலறையிலிருந்து தீப்பற்றியது என கூறப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் விபத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து குவைத் நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.