செப்டம்பர் 14, சென்னை (Political News): தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 2019ஆம் ஆண்டின் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த திட்டத்திற்கு ஒரு கோடியே 6 லட்சத்து 50,000 பெண்கள் தகுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கான உரிமை தொகை அவர்களது வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்கப்படும். Parotta Dangerous: பரோட்டா விரும்பிகளா நீங்கள்?.. மைதா மாவு பரோட்டாவால் சர்க்கரை நோய் அபாயம்; ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
உதவித்தொகை விண்ணப்பங்களின் முடிவு நிலை (Application Status), செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி (SMS) மூலமாக விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில், குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து அடுத்த முப்பது நாளுக்குள் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கான தீர்வு வழங்கும் பொறுப்பை வருவாய் கோட்டாட்சியர் ஏற்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 30 நாளுக்குள் வருவாய் கோட்டாட்சியருக்கு இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களின் தகவல்கள் அரசின் தகவல் தளங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும். கள ஆய்வு தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்வர். 30 நாளுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கான தீர்வு வழங்கப்படும்.