ஜூலை 21, மதுரை (Madurai News): ஓரணியில் தமிழ்நாடு என்ற தேர்தல் வியூகத்தில் பொதுமக்களிடம் செல்போனில் ஓடிபி (OTP) பெற தடை விதிக்கப்படுவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. திமுகவினர் தங்களது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம். ஆனால் ஓடிபி போன்றவற்றை பெறக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் செல்லும் திமுகவினர் பொதுமக்களிடம் ஓடிபி தொடர்பான விபரங்களை கேட்பதாகவும், உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்களிடம் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் கிடைக்காது என கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Parliament Monsoon Session: பொருளாதாரத்தில் முன்னேறிய இந்தியா.. உறுதி செய்த பிரதமர் மோடி.!
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு :
இது தொடர்பாக பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் திமுகவினர் ஓடிபி பெறக்கூடாது எனவும் தடை விதித்திருக்கின்றனர். கட்சியில் சேர்வதற்கு ஓடிபி தேவையா? என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன் வைத்துள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு தொடர்பான விவகாரத்தில் ஓடிபி பெறும் நடவடிக்கைக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளை நேரடியாக வழக்கில் இணைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், டிஜிட்டல் முறையில் பெறப்படும் தனிநபர்களின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது? என்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.