ஆகஸ்ட் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழை மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக இருக்கிறது. மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மத்திய மேற்கு அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதியில் வலுப்பெற்றது. இது ஆகஸ்ட் 19ஆம் தேதி முற்பகல் நேரத்தில் தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதியை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடங்கிய வேகத்தில் முடிந்த வாழ்க்கை.. காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு (Today Weather in Tamilnadu):
தென்னிந்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. தெற்கு கொங்கன் - வடக்கு கேரளா பகுதிகளில் மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகமாக வீசக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.
காலை 10 மணிவரையில் மழை:
இந்நிலையில், இன்று காலை நீலகிரி, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் 10:00 மணி வரையில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.