Road Accident in Sivaganga (Photo Credit: @ians_india X)

ஏப்ரல் 22, திருப்புவனம் (Sivaganga News): சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் (Madurai Sivaganga Highway) டீசல் டேங்கர் லாரிகள் வந்து கொண்டு இருந்தன. அப்போது, திருமாஞ்சோலை அருகே உள்ள செம்பூர் பகுதியில், எதிரே வந்த அரசு பேருந்து இன்று காலை நேருக்குநேர் மோதி (Accident) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நடுரோட்டில் காதல் ஜோடி மீது சரமாரி தாக்குதல்.. இருதரப்பு குடும்பத்தினர் வெறிச்செயல்..!

பயணிகள் படுகாயம்:

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், எரிவாயு கசியாமல் இருப்பதற்காக சோப்பு நுரைகளைக் கொண்டு தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை - சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்து - டேங்கர் லாரி நேருக்குநேர் மோதி விபத்து: