டிசம்பர் 29, மெரினா (Chennai News): சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டு (New Year 2025) கொண்டாட நேற்று (28.12.2024) காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகரில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் கலந்து கொண்டனர்.
பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை:
31.12.2024 அன்று இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. Ramanathapuram: 350 கிலோ எடையுள்ள யானை காது மீன் - ராமநாதபுரம் மீனவர்கள் மகிழ்ச்சி.!
காவல் உதவி மையங்கள்:
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை, கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முண்னேற்பாடுகள் செய்யவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் அதிகாரிகள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தவும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதையில் வாகனம் இயக்குதல், ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்:
மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலண்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
சென்னை மாநகர காவல்துறையின் அறிவிப்பு:
▶️ A consultation meeting was held by the Commissioner of Police, Greater Chennai Police, to discuss safety protocols for the New Year's Day celebrations. 🎉
▶️ Tr. A. Arun, IPS, CoP/GCP, led the meeting today at the Commissioner's office, aiming to ensure a secure and peaceful… pic.twitter.com/VvobQtockw
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 28, 2024