ஜூன் 22, சென்னை (Chennai): தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் விஜய் (Actor Vijay), தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் (GOAT Movie 2024) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதால், கோட் திரைப்படத்தை எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், படத்தின் எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் வகையில், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அமெரிக்கா, ரஷியா, ஸ்ரீலங்கா உட்பட பல நாடுகளில் நடந்து வருகிறது.
கட்சியாக மாறிய நற்பணி மன்றம்:
இந்நிலையில், ஜூன் 22ம் தேதியான இன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் ஆகும். தமிழ் திரையுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இருக்கும் விஜய்க்கு இன்றளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலில் அவர் களமிறங்குவதையொட்டி, தனது விஜய் நற்பணி மன்றத்தை தமிழக வெற்றிக்கழகமாக (TVK Party) மாற்றி, கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். Central Government Rules For Employees: காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர உத்தரவு; அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு நெறிமுறைகள்.. மத்திய அரசு எச்சரிக்கை..!
விஜய் தரப்பு கோரிக்கை:
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கவலையை எழுப்பி, ஆளும் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்த விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இதனிடையே, கள்ளச்சாராய மரணங்கள் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகமும் துயரத்தில் துடித்துக்கொண்டு இருந்ததால், தனது மன்றத்தின் நிர்வாகிகள் யாரும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். உங்களால் முடிந்தால் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள், அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள் என விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
சிறுவன் கையில் தீ:
ஆனால், அதனை மீறி ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் விஜயின் பிறந்தநாளை சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் கைகளில் தீ எரியும் போது, உடைக்கும் சவாலை எதிர்கொண்டார். அச்சமயம் சிறுவன் தீயின் வெப்பம் தாங்க இயலாது பரிதவிக்க, அவருக்கு தீ பற்றவைத்த இளைஞர் ஒருவர், கையில் எரிபொருள் இருப்பதை மறந்து தீயை அணைக்க முயற்சித்தார். அதுவே சிறுவனுக்கு பாதிப்பாக மாறி, தீ சிறுவன் மீதும், இளைஞரின் மீதும் பரவியது.
நினைவில் நிறுத்துக:
நல்வாய்ப்பாக அங்கிருந்தவர்கள் தீயை ஒருசில நொடிகளில் கட்டுப்படுத்தி, காயமடைந்த சிறுவன் மற்றும் இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவ்வாறான சாகசங்களை பயிற்சி இன்றி செய்வது, பயிற்சி பெற்றாலும் அலட்சியத்துடன் மேற்கொள்வது பின்விளைவுகளை தரவல்லவை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
As part of celebrating #Vijay 50th bday in Neelankarai today, the right hand of a boy was caught in fire when he tried to perform a stunt by breaking tiles. Unusual to see the petrol being poured into his hands and then the fire is set pic.twitter.com/aCe1TfuFiT
— Pearson abraham/பியர்சன் (@pearsonlenekar) June 22, 2024