ஆகஸ்ட் 13, சென்னை (Chennai); இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில், 78 வது சுதந்திர தினவிழா (Independance Day 2024) ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும், உலகளவில் வெவ்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் சிறப்பிக்கும் சுதந்திர தினநாளை வெகுவிமர்சையாக, பாரம்பரிய முறைப்படி கொண்டாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் மாநில வாரியாக அணிவகுப்பு, முப்படைகளின் கலைநிகழ்ச்சி நடைபெறும். தலைநகர் சென்னையிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறும். Physical Education Teacher Suspend: கால்பந்து போட்டியில் தோல்வி; மாணவர்களை காலால் உதைத்த உடற்கல்வி ஆசிரியர்.. வீடியோ வைரல்..!
டாஸ்மாக் விடுமுறை:
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் (Tasmac) நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அந்த அறிவிப்பில், இந்திய சுதந்திர தினம் சிறப்பிக்கப்படும் ஆகஸ்ட் 15 அன்று, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் பார் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் அதிகாரிகள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மதுபானக்கடைகளை கண்காணித்து, உத்தரவை மீறி செயல்படும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.