Rain | Yellow & Orange Alert (Photo Credit: Pixabay)

நவம்பர் 14, நுங்கம்பாக்கம் (Chennai News): வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இம்மழை தொடரும் என வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை புறநகர் மாவட்டங்களில் மழை:

இந்நிலையில், வரும் 2 மணிநேரத்திற்கு (Today Weather), மதியம் 12 மணிவரையில் சென்னையின் சுற்றுவட்டாரங்களில் உள்ள செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, நெமிலி, சோளிங்கர், வாலாஜாபேட்டை, ஆற்காடு ஆகிய இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Job Alert: சவூதி அரேபியாவில் டிரைலர் டிரைவர், போர்க்ளிப்ட் ஆபரேட்டர் தேவை; நல்ல சம்பளம்.. விபரம் உள்ளே.! 

ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert):

அதேபோல, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert):

வேலூர், திருப்பத்தூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளில் மழைக்கான முன்னறிவிப்பு: