Indian IMD Logo | Heatwave (Photo Credit: @airnewsalerts X / Pixabay).jpg

செப்டம்பர் 15, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பின்படி, மதுரையில் தொடர்ந்து பல நாட்களாக வெப்பம் இயல்பை விட அதிகமாக 40 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் சுட்டெரிக்கும் வெயிலை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மதுரை விமான நிலைய பகுதிகளில் கடும் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை (Weather) அறிவிப்பில், மேற்கு திசைக்காற்றின் வேகமாக காரணமாக, 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். TN Weather Update: வாட்டி வதைக்கப்போகும் வெயில்; 2 நாட்களுக்கு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.! 

அதிக வெப்பத்திற்கான எச்சரிக்கை:

அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இரண்டு - மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும். தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், ஒடிசா-மேற்குவங்க கடலோரப்பகுதி, மத்திய வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் 19ம் தேதி வரை செல்ல வேண்டாம். அதேபோல, அரபிக் கடலில் தென்மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசலாம் என்பதால், அப்பகுதிகளுக்கும் 19ம் தேதி வரை செல்ல வேண்டாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.