Thiruvalluvar | PM Narendra Modi (Photo Credit: Wikipedia / @NarendraModi X))

ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): உலகத்தமிழர்கள் பண்டிகையான பொங்கல் 2025 நேற்று (14 ஜனவரி 2025) சிறப்பிக்கப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, உலகப்பொதுமறை எனப்படும் திருக்குறளை உலகுக்கு வழங்கிய திருவள்ளுவரை, தமிழர்களின் பண்டிகைகளில் சிறப்பிக்கும்பொருட்டு, தமிழ்நாட்டில் ஜனவரி 15 அன்று திருவள்ளுவர் தினம் (Thiruvalluvar Thinam 2025) கொண்டாடப்படுகிறது. வானிலை: இன்று 6 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

திருக்குறள் - ஆழ்ந்த அறிவை வழங்கும் கலங்கரை விளக்கம்:

அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் தினம் இன்று சிறப்பிக்கப்படும் நிலையில், திருவள்ளுவரை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது எக்ஸ் பக்கத்தில், "திருவள்ளுவர் தினத்தில், நம் மண்ணின் தலைசிறந்த தத்துவஞானிகள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை நினைவு கூர்வோம். அவரது வசனங்கள் தமிழ் கலாச்சாரத்தின் அம்சத்தையும், நமது தத்துவ பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றது. அவருடைய போதனைகள் நீதி, இரக்கம், நற்செயல்கள் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. அவரது காலத்தால் அழியாத படைப்பான திருக்குறள், பல்வேறு விஷயங்களில் ஆழ்ந்த நுண்ணறிவுகளை வழங்கும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. நமது சமுதாயத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை நினைவுகூர்ந்து பாராட்டிய பிரதமர் மோடி: