பலியான தம்பதி மற்றும் விபத்திற்குள்ளான கார் ஆகியவற்றை நிழற்படத்தில் காணலாம் (Visuals from Spot)

பிப்ரவரி 20, மண்டபம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் (Mandapam, Ramanathapuram), வேதாளை சிங்கிவளை கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. திண்டுக்கல் (Dindigul) மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் சின்ன அடைக்கான். இவர் டீ மாஸ்டராக (Tea Master) வேலை பார்க்கிறார். தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் (Marriage) நடைபெற்று முடிந்தது. இதற்கிடையில் நிறைமாத கர்ப்பிணியான (Pregnant) சுமதி, தலைப்பிரசவத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு (Delivery) அனுமதி செய்யப்பட்டார். கடந்த 17ம் தேதி சுமதிக்கு ஆண் குழந்தை (Boy Baby) பிறந்துள்ளது.

இதனையடுத்து, தனது கணவர் சின்ன அடைக்கான், சுமதி, உறவினர்கள் காளியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் மண்டபத்திற்கு வந்துகொண்டு இருந்துள்ளார். அங்குள்ள பிதானூரை சேர்ந்த மணிராஜ் என்பவர் ஆட்டோவை இயக்கியுள்ளார். இவர்களின் ஆட்டோ மதுரை - தனுஷ்கோடி (Madurai - Dhanushkodi National Highway) தேசிய நெடுஞ்சாலையில், நதிப்பாலம் அருகே சென்றுள்ளது.

இராமேஸ்வரம் (Rameswaram Temple) கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்த கார், தனது பாதையில் பயணித்த மற்றொரு காரை முந்திச்செல்ல முயற்சித்தபோது எதிரிதிசையில் வந்த (Auto Car Collision 4 Died Inculding New Born Baby, Parents) ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. Tasmac Seller Attacked: ஜி-பே இல்லை என கூறியதால் டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல் – மது குடிக்க முடியாத விரக்தியில் ஆசாமி தெளிவாக வெறிச்செயல்.!

ஆட்டோவில் இருந்து சுமதி, மணிராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பிற 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்க, குழந்தை மற்றும் சின்ன அடைக்கானும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காளியம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி காவல் துறையினர் (Uchipuli Police Station), சென்னையை சேர்ந்த கார் (Chennai  Car Driver Arrested) ஓட்டுநர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து சம்பவத்தால் சுமதியின் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மிதவேகம் மிகநன்று என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட்டால் யாவருக்கும் எத்தீங்கும் இல்லை என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 20, 2023 08:28 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).