டிசம்பர் 01, சென்னை (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு (Deep Depression) மண்டலம், பல்வேறு சூழ்நிலைகளுக்கு பின், ஃபெஞ்சல் புயலாக (Fengal Cyclone) வலுப்பெற்று, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. வானிலை: இன்று 13 மாவட்டங்களில் கனமழை அலர்ட்; இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.! 

வெள்ளத்தின் பிடியில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி:

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விழுப்புரம், புதுச்சேரி தத்தளித்தது. பல கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருக்கும் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்‌சராப்பள்ளி, கரூர்‌, தேனி மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை (Today Weather Report) ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Holiday) அறிவிப்பு:

இந்நிலையில், இன்று கனமழை மற்றும் வெள்ளம் போன்ற காரணத்தால் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது அதேபோல, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.