Two Girls Drowned in Sivaganga (Photo Credit: @ThanthiTV X)

பிப்ரவரி 20, இளையான்குடி (Sivaganga News): சிவகங்கை மாவட்டம், இளையான்குடி (Ilayangudi) அருகேயுள்ள ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி குமார் - சரண்யா. இவர்களது மகள் சோபியா (வயது 8) அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். அதேபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - வேணி தம்பதியரின் மகள் கிஸ்மிதா (வயது 4) அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார். இந்நிலையில், இரு சிறுமிகளும் நேற்று (பிப்ரவரி 19) காலை வழக்கம்போல் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றனர். Love Couple Arrested: வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம்.. காதல் ஜோடி கைது..!

நீரில் மூழ்கி பலி:

இதனையடுத்து, இவர்களது பெற்றோர் மதிய உணவு இடைவேளைக்காக சிறுமிகளை அழைத்துச் செல்ல வந்தனர். அப்போது, இரு சிறுமிகளும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை தேடியபோது, பள்ளியின் எதிரே இருந்த கண்மாயில் இரு சிறுமிகளின் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் செய்தனர். உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இழப்பீடு தொகை:

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் தாய்மேரி மற்றும் அங்கன்வாடி பணியாளர் தினேஷ் அம்மாள் ஆகியோரை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.