ஜூலை 21, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா பகுதியைச் சார்ந்த பெண்மணி ஒருவர் சம்பவத்தன்று அங்குள்ள காய்கறி கடையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனையாளர் ஒருவர் பெண்ணிடம் பேச்சு கொடுத்தவாறு அவரது மொபைல் நம்பரை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி செருப்பை கழட்டி பல மக்கள் முன்னிலையில் செல்போன் நம்பர் கேட்ட நபரை தாக்கி இருந்தார். இது தொடர்பான வீடியோவை அங்கிருந்த ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிடவே, அது தற்போது வைரலாகி வருகிறது. பெண்ணின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில், இவ்வாறான தொல்லைகள் கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி காவல் நிலையத்தில் புகாரளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. Trending Video: மதுபோதையில் பாம்பை நூடுல்ஸ் போல கடித்து தின்ற இளைஞர்.. பதறவைக்கும் சம்பவம்.! 

காய்கறி வியாபாரியை பெண்மணி அடித்தது குறித்த வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)