மார்ச் 07, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை சிவராத்திரி (Shivaratri Special Bus) 8-ஆம் தேதி வருவதாலும், 9, 10 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறைகள் என்பதாலும் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு தமிழகம் முழுவதும் கூடுதலான பணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. IND vs ENG 5th Test: தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரரின் இடத்தை பிடித்த… முன்னாள் ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர்..!
சிறப்புப் பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு இன்றிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 7-ஆம் தேதி இன்று 270 பேருந்துகளும், நாளை மற்றும் நாளை மறுநாள் முறையே 390, 430 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்தும் 8, 9-ஆம் தேதிகளில் 70 சிறப்புப்பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக, 1,360 சிறப்புப்பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடு: ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் அனைவரும் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.