ஏப்ரல் 09, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Thalapathy Vijay Spiritual Temple Visit: அப்பாவைப் பார்க்க போன அண்ணா.. தலைவர் விஜய் சாய்பாபா கோவிலில் தரிசனம்..!
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 10,214 சிறப்புப் பேருந்துகளும் (Special Bus), சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் உள்பட 7,154 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3600 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.