Supreme Court of India | Jallikattu (Photo Credit: Wikiepdia)

மே 18 , புதுடெல்லி (Supreme Court Of India): தமிழர்களின் வீர விளையாட்டுகளில் முக்கியமானதாக இருப்பது ஜல்லிக்கட்டு (Jallikattu). தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தை மாதம் பொங்கல் (Pongal Festival) பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்வுகள் திரளாக நடைபெறும்.

உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Alanganallur, Avaniyapuram Jallikattu Functions) பண்டிகைகளை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவரும், வெளிநாட்டவரும் (Foreigners) வந்து நேரடியாக பார்த்து செல்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் நல வாரியத்திடம் பீட்டா (PETA India) என்ற விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு தொடுத்த புகார் மற்றும் நீதிமன்ற வழக்கால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகமே ஒன்று திரண்டு போராடி பெற்றது. Violation Of Advertising Rules: எம்.எஸ் தோனி உட்பட முக்கிய பிரபலங்கள் மீது பரபரப்பு புகார்; காரணம் தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு (Tamilnadu Govt) ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான விஷயத்தில் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், விலங்குகள் வதை தடுப்பு சட்டதிருத்தத்தின் கீழ் விலங்குகளுக்கு ஏற்படும் வலிகள் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு ஒன்று என்பதையும் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

அதேபோல, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட விலங்குகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் சட்டங்களின் செல்லுபடியை உச்சநீதிமன்றம் அனுமதிக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் விலங்குகளை (காளைகளை) வைத்து நடைபெறும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.