Kamal Haasan (Photo Credit: @iamkamalhaasan X)

ஜனவரி 16, ஆழ்வார்பேட்டை (Chennai News): பொங்கல் 2025 பண்டிகை உலகத் தமிழர்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் (Pongal 2025) கொண்டாட்டத்துடன் ஜல்லிக்கட்டு (Jallikattu 2025) உட்பட பல பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொரு ஊரிலும் களைகட்டி இருக்கிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் நான்காவது நாளாகிய இன்று, காணும் பொங்கல் பண்டிகையுடன், உழவர் திருநாள் 2025 (Uzhavar Tirunal 2025) சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் நாம் சாப்பிடும் சிறிய உணவில் தொடங்கி பழம், காய்கறி போன்றவற்றை விளைய வைத்து வழங்கும் விவசாயிக்கு, உழவர் திருநாள் நன்றி செலுத்தி சிறப்பிக்கப்படுகிறது. Alanganallur Jallikattu 2025: திமிலை பிடித்ததும் தூக்கியெறிந்து ஓட்டம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காளை வெற்றி.! 

உழவர் திருநாள் வாழ்த்துகள் - கமல் ஹாசன்:

இந்நிலையில், நடிகர் & மக்கள் நீதி மய்யம் கட்சியின் (Makkal Needhi Maiam) தலைவர் கமல்ஹாசன், தனது எக்ஸ் வலைப்பதிவில் "இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. ‘பஞ்சப் பராரிகளின் நாடு’ என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள். ‘நாட்டுப்புறத்தான்’ தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள். உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள்" என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ம.நீ.ம தலைவரின் வாழ்த்துபதிவு: