ஜூலை 26, சென்னை (Chennai News): சென்னை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் தங்கியிருந்து வேலைபார்த்து வருவார், வாரஇறுதி விடுமுறை நாட்களை சொந்த ஊரில் சென்று சிறப்பித்து வருவார்கள். இவர்களின் பயணத்திற்கு இரயில் மற்றும் சாலை போக்குவரத்தை பெரும்பாலும் நம்பியுள்ள நிலையில், மாநில அரசு சார்பில் சிறப்பு பேருந்து சேவைகளும் வழங்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள்:
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்து சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வார இறுதியான இன்று முதல் ஜூலை 28ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் சேவை வழங்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிந்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இன்று 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. TN Weather Update: காலை 10 மணிவரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அறிவுறுத்தல்:
திருவண்ணாமலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தமாக 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளையும் கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேவேளையில், கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இன்று மற்றும் நாளை வேளாங்கண்ணி, பெங்களூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு 65 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு எதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அதே வேளையில், அவர்கள் ஞாயிறு இரவு திரும்பி வரவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் கூடுதல் பேருந்துகளை மண்டல வாரியாக இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.