செப்டம்பர் 21, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாக உள்ளது. வட தமிழகம், தென்தமிழகத்தில் அநேக இடங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.!
சென்னை வானிலை (Chennai Weather):
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.