செப்டம்பர் 20, நுங்கம்பாக்கம் (Chennai News): வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TVK Vijay Nagapattinam Thiruvarur Campaign: நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் பிரச்சாரம்.. தனி விமானத்தில் புறப்பட்டார்.!
மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.