TVK Vijay Nagapattinam, Thiruvarur Visit Today (Photo Credit: @SunnewsTamil / @TVKVijayHQ X)

செப்டம்பர் 20, சென்னை (Chennai News): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam) ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்கிறார். நாளொன்றுக்கு 2 முதல் 3 மாவட்டங்கள் வரை பிரச்சார பணிகளை மேற்கொள்ள தவெக தலைமை வியூகம் வகுத்துள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் சனிக்கிழமை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களான திருச்சி (Trichy), அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது திருச்சி மற்றும் அரியலூரில் ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் பெரம்பலூரில் இறுதியாக பிரச்சாரம் நடைபெறவில்லை. மாற்று தேதி அறிவிக்கப்படும் என தவெக தலைமை அறிவித்தது. Robo Shankar: ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்..! 

தவெக விஜய் நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று பிரச்சார பயணம் (TVK Vijay Nagapattinam & Thiruvarur Campaign):

அதனைத்தொடர்ந்து, இன்று விஜய் நாகப்பட்டினம் (Nagapattinam), திருவாரூர் (Thiruvarur) மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுகிறார். நாகப்பட்டினத்தில் காலை 11 மணியளவில் அண்ணா சிலை சந்திப்பு பகுதியிலும், திருவாரூரில் பிற்பகல் 3 மணிக்கு நகராட்சி அலுவலகம் தெற்கு வீதி பகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சார பயணத்துக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுள்ள விஜய், திருச்சியில் இருந்து நாகபட்டினத்துக்கு சாலை மார்க்கமாக செல்கிறார். காலை 8 மணிக்கு அவரின் தனி விமானமும் திருச்சி நோக்கி புறப்பட்டுவிட்டது. இதனால் நாகப்பட்டினத்தில் விஜயை காண ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுடன் விஜய் பிரச்சார பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.