வானிலை: நீலகிரி, கடலூர், தேனி உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அறிவிப்பு.!

சென்னை, விழுப்புரம், திருப்பூர், தென்காசி உட்பட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இன்றைய வானிலை நிலவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வானிலை: நீலகிரி, கடலூர், தேனி உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அறிவிப்பு.!
Tamilnadu Rains File Pic (Photo Credit : @ETVBharatTN X)

ஆகஸ்ட் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 13ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. Gold Rate Today: அதிரடி சரவெடி.. தங்கம் விலை இன்றும் கிடுகிடு குறைவு.. வெள்ளி விலையும் இறங்கு முகம்.! 

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து, இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை இன்று (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Aug 12, 2025 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).