ஆகஸ்ட் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு கடலோர ஆந்திர பிரதேச மாநிலங்களில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர், மதுரை, கடலூர், தர்மபுரி, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருச்சி, கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. Bank Jobs: எஸ்.பி.ஐ வங்கியில் 6,589 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க.!
மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் மாலை 4 மணிவரை அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை இன்று (Chennai Weather):
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், வானம் மேகளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக இன்று 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், இன்று தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடலில் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை வீசலாம் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.